திருமதி. விநாயகமூர்த்தி பூரணநாயகி
மறைவு: 30 டிசம்பர் 2025
முல்லைத்தீவு - முள்ளியவளை 2ம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும், வவுனியா - வைரவபுளியங்குளத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விநாயகமூர்த்தி பூரணநாயகி அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, இராசையா, மார்க்கண்டு மற்றும் செல்வரத்தினம், பாக்கியம், இராசமணி, தெய்வசிகாமணி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லதம்பி, வேலுபாபிள்ளை, தங்கம்மா மற்றும் செல்வநாயகம், தங்கராசா ஆகியோரின் மைத்துனியும்,
செல்வரஜனி (மாவட்டச் செயலகம், வவுனியா), செல்வரஞ்சன் (ஆரியன் ஸ்டோர்ஸ், வேப்பங்குளம், வவுனியா), தயாளன் (தர்மலிங்கம் சேர்விஸ் ஸ்டேஷன், வவுனியா), தயாபரன்(மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்), அஜந்தா (முன்னாள் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
அபிஷன், அனோஜன், ஆரியன், சானுயா, நிக்சிதா, அனுக்ஷன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-01-2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் வெளிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
