Mr. Vinayagasivampillai Sathasivam
Deceased: 28 April 2025
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாயகசிவம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகசிவம்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - தையல்முத்து அவர்களின் மருமகனும்,
காலஞ்சென்ற சௌந்தராம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா (பிரதேச செயலகம், நல்லூர்), சிவறஞ்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகாந்தன் (மாவட்டச் செயலகம்) அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானவதி, பராசக்தி, சிவசிதம்பரம், மற்றும் சிவகௌரி அம்மா, கற்பகவதி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-04-2025 செய்வாய்க்கிழமை காலை 8:00 மணியளவில் நல்லூர் கோவில் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல-435/19, கோவில் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
