Mr. Vingnanalingam Karthigesu
(கொடிகாமம் கிருஷ்ணவிலாஸ் உணவக உரிமையாளர்)
Date of Birth: 10 November 1954 - Deceased: 27 August 2025
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஞ்ஞானலிங்கம் கார்த்திகேசு அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், மரியாம்பிள்ளை - லில்லி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
பாலதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
திலிப், பிரசன்னா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செளபாக்கியவதி, பஞ்சலிங்கம், சுலோஜனா, சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 - 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
