திரு. வினோஜ்குமார் கங்காதரம்
(நாதக்குரல் அறிவிப்பாளர்)
தோற்றம்: 19 ஜூலை 1981 - மறைவு: 30 ஜூன் 2025
கம்பஹா - மீரிகமவைப் பிறப்பிடமாகவும், யாழ். 3ம் ஒழுங்கை, மின்சார நிலைய வீதி, Noisy-le-Grand, பிரான்ஸை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வினோஜ்குமார் கங்காதரம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கங்காதரம் - காலஞ்சென்ற மனோன்மணி தம்பதியினரின் செல்ல மகனும், கமலநாதன் - சீதா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கஜேந்தினி (கஸ்தூரி) அவர்களின் அன்புமிகு கணவரும்,
இனியா அவர்களின் பாசமிக்க தந்தையும்,
சாந்தகுமார் (கனடா), கங்காஜினி (இலண்டன்), கங்காதர்சினி (கனடா), கங்காலோஜினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரனும்,
தர்சிகா, யோகானந்தசிவம், அகிலேஸ்வரன், சோமநாதன், கரிகாலன் (கனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Institut Mèdico - Lègal ( 2 Voie Mazas 75012, Paris, France) இல் நடைபெற்று, நண்பகல் 12:15 - 1:00 மணி வரை Crématorium des joncherolles Villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) அஞ்சலி செலுத்தப்பட்டு, மதியம் 1:15 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
