திருமதி. விபுலானந்தன் கமலாதேவி

விபுலானந்தன் கமலாதேவி

தோற்றம்: 25 மே 1951 - மறைவு: 31 ஜூலை 2026

யாழ் சிவசக்தி கோவிலடி அச்சுவேலி தெற்கு அச்சுவேலியைச் சேர்ந்த திருமதி. விபுலானந்தன் கமலாதேவி அவர்கள் 31-07-2026ம் திகதி வெள்ளிக்கிழமை நேற்று கர்ததருக்கள் உறங்கிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற விபுலானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற அருணகிரிநாதன், பரமானந்தன், சறோஜினிதேவி, சண்முகநாதன், விமலாதேவி, யோகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
நீலவேணி (கனடா), சத்தியதேவி, சந்தானலக்சுமி (அபிவிருத்தி உத்தியோகத்தர், தெல்லிப்பளை), காலஞ்சென்ற தினேஸ்குமார், பாரத்குமார் (கனடா)  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சுதாகர் (கனடா) , காலஞ்சென்ற கனகரத்தினம் (மணிவண்ணன்),  விமலன் (பணிப்பாளர், காணி சீர்த்திருத்த ஆணைக்குழு), அனுஷா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், 
 
ஆகாஷ் (கனடா), காலஞ்சென்ற அஸ்வினி (கனடா), விஸ்ணுகாந்தன், விஸ்ணுபிரியா (லண்டன்), விஸ்ணுகோபன், விஸ்ணுதர்மிகா,  விஸ்ணு கஜானா, கஜலக்சன், கஜவிதுசன், பிரனீஸ் (கனடா), சஸ்விந் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 04-08-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 10:00 மணியளவில் இடம்பெற்று முற்பகல் 11:00 மணியளவில் நல்லடக்கத்திற்காக வல்லை நாற்சதுர சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்டும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2026 06:36)