திரு. விறாஸ் மரியாம்பிள்ளை

(மடுக்கோயில் Canteen உரிமையாளர்)

விறாஸ் மரியாம்பிள்ளை

தோற்றம்: 05 ஏப்ரல் 1943 - மறைவு: 04 ஆகஸ்ட் 2024

மன்னார் குஞ்சிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பெரிய பண்டிவிரிக்கானை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விறாஸ் மரியாம்பிள்ளை அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், மதலேனா (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக்கணவரும்,

ரெஜி (நோர்வே), விஜி (சுவிஸ்), ராஜி (நோர்வே), சுஜி (இலண்டன்), சஜின் (நொயில்-சுவிஸ்), ரஜின் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தி, வதி, காலஞ்சென்ற ரவீந்திரன், அன்ரன், சுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரீடா, மௌலி, அட்சயன், ஆஞ்சயன், மனிஷா, அஷ்மிதா, ரஜீவ லவுசன், ரஜீவ பிரகாஷ், அனுசியா, விதுஷன், மேரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 07-08-2024 புதன்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பொரளை றேமன் (A.F.Raymond) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-08-2024 வியாழக்கிழமை அன்று குஞ்சுக்குளத்திலும், பெரிய பண்டிவிரிச்சானிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, மடுத்திருத்தல சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"ஆவே மரியா"

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2024 04:00)