Late. Visakarathna Iyer Theivendra Iyer
(தொண்டைமனாறு ஶ்ரீ செல்வ சந்நிதி ஆலய பூசகர்)
Date of Birth: 19 April 1942 - Deceased: 10 May 2024
யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திர ஐயர் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் முருகனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா விசாகரத்தின ஐயர்(பிரதம குரு)-நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
ஆறுமுகசாமி ஐயர்(பிரதமகுரு)- வேதநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரராணி, ஜெயந்திரன், சசிந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்ற துஷியேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ச.சிறிரஞ்சன், சசிகலா, ஜெயந்தாதேவி, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிலன், லாேகஜன், கணேந்திரன், ஹரேந்திரன், யுகேந்திரன், வைஸ்ணவி, மயூரதி, தீபிகா, சுதர்சினி, கிருஸ்ணேந்திரன், சிவனேந்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், கு.தேவாம்பிகை மற்றும் இராஜேந்திரம், பா. விமலாம்பிகை, விஜேந்திரன், யோகேந்திரன், காலஞ்சென்ற லோகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆறுமுகசாமி ஐயர், சிவசண்முக ஐயர்(பிரதமகுரு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2024 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்று, தொண்டைமானாறு காட்டுப்புலம் இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
