Mr. Visvalingam Yogalinam
(Retired Engineer - Railways Deapartment)
Date of Birth: 23 June 1927 - Deceased: 03 March 2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் யோகலிங்கம் அவர்கள் 23-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - கனகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான முத்துகுமார் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யோககுமார், விஜயகுமார், உதயகுமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யவனராணி, சித்திரா, தர்ஷினி, தங்கேஸ்வரி ஆகியோரின் மாமனாரும்,
அஸ்வினி, சாரங்கன்-மதுஷா, கௌசிகன், தனுஸ்கா, அனுஜா ஆகியோரின் அப்பப்பாவும்,
குணமதி, காலஞ்சென்றவர்களான ரதிமதி, கனகலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, வாஹீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-03-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் (No-48, De Alwis Place, Dehiwala) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-03-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
