திரு. விஸ்வலிங்கம் லோகநாதன்
(இளைப்பாறிய நில அளவையாளர்-தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை)
தோற்றம்: 15 அக்டோபர் 1943 - மறைவு: 10 நவம்பர் 2024
யாழ். அளவெட்டியைச் சேர்ந்தவரும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் லோகநாதன் அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கதிரவேலு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
ஶ்ரீஹரன், ஶ்ரீராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசக்தி, நாராயணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தியாகராஜா, கணேசன், தனலக்ஷ்மி மற்றும் தில்லைநாதன், பரமேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பிரமானந்தா, லோகேஸ்வரி, சிவராஜேஸ்வரி, சண்முகராஜா, சிவசுப்பிரமணியம், சண்முகநாதன், கணேஸ்வரன் மற்றும் சரோஜினி, சிவபாலினி ஆகியோரின் மைத்துனரும்,
காயத்திரி, அஜந்தன், யாதவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னராின் புகழுடல் 13-11-2024 புதன்கிழமை காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
