திருமதி விஸ்வலிங்கம் சிவபாக்கியம்(முத்துப்பிள்ளை)
தோற்றம்: 04 ஆகஸ்ட் 1937 - மறைவு: 07 ஜூன் 2024
யாழ் அளவெட்டி மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவபாக்கியம்(முத்துப்பிள்ளை) அவர்கள் கடந்த 07-06-2024ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆச்சிமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லாச்சி தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகலிங்கம்(சொக்கன்), சந்திரமதி, உதயகுமார், தபோதினி, ரமேஸ்குமார், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருந்ததி, சிவகுமார், நகுலேஸ்வரன், கவிதா, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வதனி,தயாறூபன், லேணிகா ஆகியோரின் பெரிதாயும்,
ராசபூபதி, நாகம்மா மற்றும் காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, தங்கராசா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவி, சின்னாராசா, அரியரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறதிக்கிரியைகள் இன்று 11-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை காலை 1000 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
சாரதா வீதி,
சங்கத்தானை, சாவகச்சேரி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/06/2024 00:14)
