திரு. விஸ்வலிங்கம் சூரியகுமார் (சூரி)

விஸ்வலிங்கம்  சூரியகுமார் (சூரி)

தோற்றம்: 09 ஆகஸ்ட் 1960 - மறைவு: 07 ஜூன் 2025

யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் சூரியகுமார் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - மகேஸ்வரி தம்பதியிரின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

சர்மிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முல்லைத்தீவு), காலஞ்சென்ற சகானா, மதுக்சனா (நுண்கலைப்பீடம், யாழ் பல்கலைக்கழகம்), மதுக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகுமார், விஷயராணி, இரத்தினகுமார், காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், சிறீதரன் மற்றும் சத்தியலிங்கம், காலஞ்சென்ற தியாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற கனகராஜா (வர்ணவாரிதி), கேதீஸ்வரன், சரோஜினிதேவி, ஜெயசீலன், காலஞ்சென்ற மங்கையற்கரசி, மங்களேஸ்வரி, நித்தியானந்தன் (சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் -  மன்னார் மாவட்டம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-06-2025 செவ்வாய்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருநெல்வேலி பால் பண்ணை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

அம்மன் வீதி,

திருநெல்வேலி கிழக்கு.

தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2025 19:25)