திரு. விசுவலிங்கம் குணசிங்கம்

(ஓய்வுபெற்ற நில அளவை அரச உத்தியோகத்தர்)

விசுவலிங்கம் குணசிங்கம்

தோற்றம்: 28 நவம்பர் 1930 - மறைவு: 02 டிசம்பர் 2025

யாழ். வேலணை அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா - Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் குணசிங்கம் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் - அன்னம்மா (தம்பு) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

முத்துலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமி, பரமலிங்கம், அன்னலெட்சுமி, பாக்கியலெட்சுமி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வி.பி.கந்தையா, அன்னலெட்சுமி, சதாசிவம், மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலாம்பாழ், மகாலெட்சுமி ஆகியோரின் சகோதரணும்,

காலஞ்சென்றவர்களான காந்தம்மா, சொர்ணம்மா, பூவம்மா, பாலசிங்கம், சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலசந்திரன் (சுவிஸ்), ஜெயமதி (சுவிஸ்), கலாமதி (கனடா), ரவிச்சந்திரன் (சுவிஸ்), சிவமதி (இலண்டன்), ஜெயச்சந்திரன் (இலண்டன்), சிவச்சந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தமலர், சண்முகானந்தன், செல்வநாதன், நிஷாந்தினி, சரவணபவன், திலகாயினி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லிதியா, சினேகா, ரஜிதா, கெளஷிகா, அனுஷா, கீர்த்தன், யாமினி, பிரவீணா, சர்னிகா, மதுஷன், ஹரிஷ், கிருஷாந்த், அஷ்விந், அரவிந், சந்தோஷ், ஹனிஷ், அக்சயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மயூரன், சர்மிலன், கௌரிசங்கர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லைஷா, மேகன், பரிக்சித், அவந்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-12-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 - 11:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2025 00:00)