Mrs. Viswalingham Kanagambikai
Deceased: 05 April 2026
யாழ். குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், உரும்பிராய் முருகன் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். விஸ்வலிங்கம் கனகாம்பிகை அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விஸ்வலிங்கம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணேஷ்வரன், பரமேஸ்வரி (கனடா), ராஜேஸ்வரி (சுவிஸ்), புவனேஸ்வரி (இலண்டன்), விக்னேஸ்வரி (உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலியுகவரதன், சுதர்சன், வசந்தருபி, சுரேஷ்குமார், சுஜா, பிரபு, துர்க்கா, கிஷ்ணா, விஷ்ணுகரன் ஆகியோரின் பெரியம்மாவும்,
பானுமதி, ஸ்ரீ, செந்தில், கிரி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 08-04-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
