திரு. விஸ்வன் தாமோதரம்

விஸ்வன் தாமோதரம்

தோற்றம்: 22 டிசம்பர் 1964 - மறைவு: 04 ஜூலை 2025

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை தமோதரம்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வன் தாமோதரம் அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தாமோதரம் - (Sara Master- பரியோவான் கல்லூரி ஆசிரியர், யாழ்ப்பாணம்) - அபிராமசுந்தரி தம்பதியினரின் அன்பு மகனும்,

சுரேஷினி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,

யதீசா- சந்தியா, சாயிசுப்பிரியா- அபிராம், அகிலேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லீலா ஞானா, ஆரவ் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-07-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 10:15 மணி வரை Home London UK இல் நடைபெற்று, முற்பகல் 10:40 மணியளவில் திருவுடல் South West Middlesex Crematorium (Hounslow Rd, Feltham TW13 5JH, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2025 04:00)