திருமதி. விவேகானந்தா சித்திரா

விவேகானந்தா சித்திரா

தோற்றம்: 08 பெப்ரவரி 1964 - மறைவு: 04 செப்டம்பர் 2025

கண்டி தெய்யனவெலயை பிறப்பிடமாகவும், கொழும்பு ஆமர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விவேகானந்தா சித்திரா அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற வெங்கடாசலம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு புதல்வியும், புங்குடுதீவு ஓய்வு பெற்ற மூத்த தபால் ஊழியர் காலஞ்சென்ற குமாரசுவாமி - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த விவேகானந்தா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வச்சந்திரன் (LB Finance Customer Experience Manager), விசித்திரன் (Commi 2 Royal Colombo Golf Club) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜகோபல், சபாபதி, சந்திரசேகரன் மற்றும் சத்தியமூர்த்தி, சர்வேஸ்வரி, சிங்காரவேலு, சிதாலச்சுமி, சங்கரபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசந்திரன் (ஓய்வு பெற்ற தபால் ஊழியர் - புங்குடுதீவு), குணேந்திரன் (சுவிஸ்), காலஞ்சென்ற பத்மலோசனி (கனடா), யோகமலர் (இலண்டன்), காலஞ்சென்ற புஷ்பராணி, சோமஸ்வரி (வவுனியா), சுதர்சனி (கண்டி), சிவநந்தினி (வவுனியா) ஆகியோரின் பாசம்மிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரி இறுதி நிகழ்வுகள் 06-09-2025 சனிக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2025 04:00)