Mrs. Vijayalatchumy Saminathan
Date of Birth: 10 December 1949 - Deceased: 28 April 2024
யாழ். புலோலி தெற்கு, புற்றளை மாவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி சாமிநாதன் அவர்கள் 28-04-2024 ஞாயிற்று்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரி, இளநங்கை, கோமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருந்தவராஜா, ரஜீகரன், சிவானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆனந், சாதுரியன், சாருஜன், சாரங்கா, சாரங்கன், மதுசியா, மதுமிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற வரதலட்சுமி, கமலாதேவி, காலஞ்சென்ற சரஸ்வதி, ஏரம்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வடிவேலு, செல்வராஜா, இராமச்சந்திரன், காலஞ்சென்ற வேல்முருகு, சிவக்கொழுந்து, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் புற்றளை, புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனக்கிரியைகளுக்காக புலோலி ஆனைவிழுந்தான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
