திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
மறைவு: 01 மே 2025
யாழ் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01-05-2025 வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2025 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில் பரிபூரணத்துக்குரிய கிரியைகள் ஆதீனத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2025 07:14)
