திருமதி. யசோதராதேவி தியாகராஜா

(இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி)

யசோதராதேவி தியாகராஜா

தோற்றம்: 07 மே 1933 - மறைவு: 22 செப்டம்பர் 2021

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யசோதராதேவி தியாகராஜா அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. நவரட்ணராஜா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற திரு. திருமதி. றாயோசாகிப் M.சின்னத்தம்பி தம்பதிகளின் மருகளும்,

காலஞ்சென்ற சி. தியாகராஜா (முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர், முன்னாள் உடற்கல்விப் பணிப்பாளர்- யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராகுலன் (அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

மாலினி அவர்களின் அன்பு மாமியாரும்,

சுபத்திரா சிவநாயகம், காலஞ்சென்றவர்களான உருத்திரா நவரட்ணராஜா, சிவகுமாரன் நவரட்ணராஜா மற்றும் கௌசல்யா தட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற ராதா ராஜரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவநாயகம், சகுந்தலா மற்றும் அகிலாண்டநாயகி, காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, ராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிஷா, ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2021 09:34)