Mr. Yogalingham Arulambalam

Yogalingham Arulambalam

Date of Birth: 10 January 1945 - Deceased: 22 September 2025

யாழ் குரும்பசிட்டி பிறப்பிடமாகவும், கட்டுவன், மீசாலை மற்றும் கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகலிங்கம் அருளம்பலம் அவர்கள் 22-09-2024 திங்கட்கிழமை அன்று தனது 80வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவஞானமணி (சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும், 

டினேஷ் (கனடா), உமேஷ் (பிரான்ஸ்), காங்கேஷ் (கனடா), நிர்மதா (கனடா), ராகேஷ் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜிதா, பிரிஷாந்தினி (பிரியா), தர்மினி, செவ்வேற்குமரன், சுபேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோகமலர் (கற்கண்டு), சோதிலிங்கம் (சோதி), சோதிமலர் ஆகியோரின் சகோதரரும்,

பவானி, காலஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, சற்குணநாதன், குணரட்ணம், தேவராஜா, செகராஜா, தியாகராஜா மற்றும் செல்வராஜா, சிவராஜா, சிவநேசமணி, செல்வராணி, ரஜனி, சாந்தினி, அமுதினி ஆகியோரின் மைத்துனரும்,

தாரிகா, விபிசன் அபீனா, அபிநிஷா, தீபிகா, தன்ஷிகா, அரன், ஆதிரா, அக் ஷரா, ஆருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-09-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2025 04:00)