Mrs Yogamathini Maran

Yogamathini Maran

Deceased: 11 November 2019

ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகமாதினி மாறன் 11.11.2019 யாழ்ப்பாணத்தில் காலமானார்.


அன்னார் ஏழாலை கிழக்கை பூர்வீகமாகவும் உடுவில் சிங்கம் ஒழுங்கையைத் தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற செல்வரத்தினம் மற்றும் இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும்,

மாறனின் அன்பு மனைவியும்,

கலைஞர் வேல் ஆனந்தன், காலஞ்சென்ற திரேசா தம்பதியரின் மருமகளும்,

சிவகரன் (பிரான்ஸ்), பகிரதி (ஆஸ்திரேலியா), உமாகரன் (ஏழாலை), தனபாலன் (உக்ரேன்), செல்வமாதினி, நவநீதன், விஜயகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகேஸ்வரன், ஜெயநிதி, சுமதி, சுகந்தி, நினி, சோபனா, வினோ (பிரான்ஸ்), குமரன் (கனடா), மதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.11.2019) புதன்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஏழாலை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

சிங்கம் ஒழுங்கை , உடுவில்.

தகவல்:-

அரு. மாறன்
(கணவன்)
+94 77 526 8429,+94 77 379 2636

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2019 04:09)