திருமதி யோகநாதன் புவனேஸ்வரி (கிளி)

யோகநாதன் புவனேஸ்வரி (கிளி)

தோற்றம்: 29 ஜூலை 1949 - மறைவு: 12 செப்டம்பர் 2024

யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகநாதன் புவனேஸ்வரி அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருகளும்,

காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின்  பாசமிகு மனைவியும்,

சுபோசினி, சுபாசினி, சபோசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரபச்சந்திரன், இரஜனிகாந் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், தக்ஷயா, பிரித்திகன், சாறா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற நீலாம்பிகை, கனகாம்பிகை, கமலாதேவி, இராஜேஸ்வரி (சுவிஸ்), இராஜலக்சுமி, சகாதேவன் (பிரான்ஸ்), விமலாதேவி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-09-2024 வெள்ளிக்கிழமை அச்சுவேலியில் உள்ள  அன்னாரின் இல்லத்தில் காலை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 10:00 மணியளவில் வயாவிளானில் அமைந்துள்ள பூனையன்காட்டு இந்து மயானத்தில் தகனம்  செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

 குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2024 23:38)