திருமதி. யோகராஜா கனகேஸ்வரி (குஞ்சாக்கா)

(ஓய்வுபெற்ற RDA உத்தியோகத்தர்)

யோகராஜா கனகேஸ்வரி (குஞ்சாக்கா)

தோற்றம்: 24 ஜூன் 1948 - மறைவு: 26 ஆகஸ்ட் 2026

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகராஜா கனகேஸ்வரி அவர்கள் 26-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு - கனகம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்தம்பி - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

யோகராஜா மாஸ்டர் (ஓய்வுபெற்ற அதிபர், JP) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிஷாகாந், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜிதா, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தியட்ஷயாவின் பாசமிகு அப்பம்மாவும்,

ஞானேஸ்வரி, காலஞ்சென்ற கமலேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

தனலக்ஷ்மி, யோகநாதன் ஆகியோரின் அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 22, மத்திய வீதி, உவர்மலையில் அமந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2026 00:00)