Mrs. Yogarajah Puvaneswary

Yogarajah Puvaneswary

Deceased: 21 October 2025

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி வீதி, பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராஜா புவனேஸ்வரி அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - இராசாத்தியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சோதிநாதனின் (பிரித்தானியா) மைத்துனியும்,

இந்திராணியின் சகோதரியும்,

புவனராஜன் (அமெரிக்கா), புஸ்பராஜன் (பிரித்தானியா), திலகராஜன் (நியூசிலாந்து), கோகுலராஜன் (கனடா), கிருஸ்ணராஜன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லொசானி, வத்சலா, ஜீவமனோ, சாமினி, துவாரகா ஆகியோரின் அன்பு மாமியும்,

ஹர்சன், சியாம், அபர்னா, சௌபர்ணிகா, ரிஷிடரன், ரிஸ்னிகா, கேசிகா, தேனுகா, தேஸ்விகா, சந்தோஷ், லக் ஷியா, அஸ்வின்ந், யசிகா, ஆத்விகன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-10-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல-20, சங்கிலியன் வீதி, நல்லூர் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முகவரி:-

இல- 20, சங்கிலியன் வீதி,

நல்லூர், யாழ்ப்பாணம்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+44 758 547 3461
சுரேஸ் (மகன்):- +94 77 491 9766

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2025 00:00)