திருமதி. யோகராணி சண்முகராசா

யோகராணி சண்முகராசா

தோற்றம்: 26 ஜூன் 1959 - மறைவு: 18 நவம்பர் 2025

யாழ். வேலணை அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராணி சண்முகராசா அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் (இரத்தின வாத்தியார்) - சிவமணி தம்பதியினரின் அன்பு மகளும்,

மண்கும்பாணைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தங்கராசா - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சண்முகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

டிலக்‌ஷா (விரிவுரையாளர் - கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி), சவீதன் (உரிமையாளர் - யோகசண் போன் சொப், வேலணை), திவ்யா (முன்னாள் NDB வங்கி ஊழியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. யோகநாதன் (வைத்தியர், கொழும்பு), சரவணபவன் (இலண்டன்), ஜோதிராஜா (கனடா), சிவகுமார் (யாழ்), பாலகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவீனா, செந்தீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதிரன், ஆதவன், ஹர்ஷவி, தர்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சரோஜினிதேவி, அன்புனேஸ்வரி, காலஞ்சென்ற மனோகராசா கருணாதேவி, காலஞ்சென்ற பராசலிங்கம், நிர்மலாதேசி, நந்தினிதேவி ஆகியோரின் அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நல்லூரிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2025 00:00)