Mr. Yogarasa Suthakaran
(வத்தேகம கல்வி வலயத்தின் தகவல் தொழிநுட்ப பாடத்துக்கான இலங்கை ஆசிரிய ஆலோசகர், சமாதான நீதவான்)
Date of Birth: 22 January 1970 - Deceased: 25 June 2026
யாழ். கரவெட்டி கிழக்கு கிழவித்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வத்கம - கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. யோகராசா சுதாரன் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோகராசா (கூட்டுறவுப் பரிசோதகர்) - சிவபாக்கியம் தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற பால கிருஸ்ணன் (களஞ்சிய காப்பாளர் பல.நோ.கூட்டுறவுச் சங்கம், புலோலி) - அன்னபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
யதோதா அவர்களின் அன்புக் கணவரும்,
யதுர்ஷின் (4ம் வருட மருத்துவ பீட மாணவன் பேராதனைப் பல்கலைக்கழகம்), சாயிஷன் (3ம் வருட பொறியயல் பீட மாணவன் மொறட்டுவ பல்கலைக்கழகம்), அபிர்ஷா (க.பொ.த உயர்தர வகுப்பு மாணவி - கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விநாயகரன் (விரிவுரையாளர் யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய்) சுவிதாயினி, சதீஸ்கரன் (முகாமைத்துவ உதவி யாளர், மாகாண கல்வித் திணைக்களம், கிழக்கு மாகாணம்), சுகந்தாயினி (UK) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலமுரனி (பிரித்தானியா), பாலமுகுந்தன் (சுவிஸ்), பாலகரன் (பிரித்தானியா), பாலகுகன் (பிரித்தானியா), பாலசோதி (பிரித்தானியா), பாலதீபன் (பிரித்தானியா), வனிதா( வவா), பரமேஸ்வரன் (உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் வ.மா), லோயினி ஆசிரியை- யாழ். கற்கோவலம் மெ.மித.க.பாடசாலை), சிறீகாந்தா (பிரித்தானியா), றஞ்சனா (ஆயுள்வேத மருந்தகர், கோபாலபுரம், நிலாவெளி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் மடத்தடி, அல்வாய் கிழக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கருகம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
யதுர்ஷன்:- +94 74 277 0204
சாயிஷன்:- +94 77 508 7006
www.tamilthakaval.org
