Mrs. Yogeshwaran Dhinamanidevi

Yogeshwaran Dhinamanidevi

Date of Birth: 23 April 1943 - Deceased: 21 May 2026

யாழ். நல்லூர் கைலாயபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரன் தினமணிதேவி அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா - அன்னலட்சுமி  தம்பதியினரின் மருமகளும்,

யோகேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

யோதிலா, யோமினா, யோன்சி, தினேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சபேசன் (உபதலைவர் / வெளிநாட்டுப் பொறுப்பாளர் - யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம் ), ஐமுகன், மனோறஞ்சன், மேரிஸ்ரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பராசக்தி, காலஞ்சென்ற பாக்கியநாதன், பத்தினிதேவி, சாந்தினிதேவி, பாலேந்திரன் ஆகியோரின் சகோதரியும்,

இராஜேஸ்வரன், தவமலர் ஆகியோரின் மைத்துனியும்,

தருஷ், நிலோஷ், கஸ்மிகா, அகல்யா, கவிநயா, தனுஷியா, ரதிவர்மண், சாருஜன், தான்யா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருநெல்வேலி பிராமண உயரப்புலம்  இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

பெரியபுலம் வீதி,

கோப்பாய் தெற்கு, கோப்பாய்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/05/2026 00:00)