திரு. யோகேஸ்வரன் பிரஷன்னா
தோற்றம்: 08 பெப்ரவரி 1996 - மறைவு: 08 ஏப்ரல் 2026
திருகோணமலை - மூதூர் பாலத்தடிச்சேனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யோகேஸ்வரன் பிரஷன்னா அவர்கள் 08-04_2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், யோகேஸ்வரன் - வசந்தமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கிருத்திகா, லக்ஷ்மன், மஹிஷா, ஹரிசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானமூர்த்தி - செல்லத்தங்கம் தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா - நேசமணி தம்பதியினரின் செல்லப்பேரனும்,
சிறீதரன், முரளிதரன், ஜெயந்தி, ஜீவதி, சுமதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சுகந்தமலர், திலகேஸ்வரன், இராஜேஸ்வரன், கேதீஸ்வரன், பிரதாபன், பிரதீபன் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 08-04-2026 புதன்கிழமை மாலை 4.30 மணி வரை திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பாலத்தடிச்சேனையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் பாலத்தடிச்சேனை இந்து மாயனத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
