திருமதி. யோகேஸ்வரி வடிவேல்
தோற்றம்: 23 ஜனவரி 1944 - மறைவு: 24 நவம்பர் 2026
மட்டக்களப்பு - திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகேஸ்வரி வடிவேல் அவர்கள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பன் - பெரியபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி - கன்னியதங்கபிள்ளை தம்பதியனரின் அன்பு மருமகளும்,
வடிவேல் (ஓய்வு பெற்ற சாலைப்பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தன் (Pharmacologist, இலண்டன்), குருகுலசிங்கம் (மருந்தாளர், பொறுப்பதிகாரி, RMSD, மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்ஷிக்கா (மருந்தாளர், இலண்டன்). கோபிகா (ஆசிரியை - மட்-மகாஜன கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, முத்துலிங்கம், அயிலேசபிள்ளை, கெங்கேஸ்வரி, இராஜேஸ்வரி, அமிர்தேஸ்வரி, சிவநேசராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திரேசா, சீனிப்பிள்ளை, வைரமுத்து, வெனடிற், கந்தப்பன் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஹவின், அவனிக்கா, ஆஹவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 26-11-2026 வியாழக்கிழமை அன்று திருப்பழுகாமம், 2ம் குறிச்சியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் திருப்பழுகாமம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 70 691 9195
www.tamilthakaval.org
