Mrs. Yogewaran Vijayanthi

Yogewaran Vijayanthi

Date of Birth: 22 February 1982 - Deceased: 18 November 2025

வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரன் விஜயந்தி அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நகுலேஸ்வரன் - வசந்தகுமாரி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் - மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆரியன், ஆதன், மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதீபன், பிரதாபன் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

காலஞ்சென்ற திருஞானம், லோகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும்,

வேணி (கனடா), சுதேசபாலன் ஜோகரெட்ணம் (பிரான்ஸ்), சத்தியபாலன் மஞ்சுளா (கனடா), விஜயலட்சுமி சோதிராஜன் (இலங்கை), தேவமாலா பிறேம்தாஸ் (கனடா), பாலகுமரன் சிவதர்சினி (பிரான்ஸ்), சுகந்தினி மோகனச்சந்திரன் (கனடா), அருள்தேவி ரவிந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாஸ்கரதாஸ், ரவி, மோகன், ஜீவன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஜெயந்தி, கவிதா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ஓவியா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-11-2025 சனிக்கிழமை அன்று மாலை 6:30 - 9:30 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 9:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2025 00:00)