Mr. Yuvakken Edmund Arulanatham
Date of Birth: 06 November 1943 - Deceased: 25 January 2025
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. யுவக்கீன் எட்மன் அருளானந்தம் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து யுவக்கீன் - கிரேஸ் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அன்ரனி, செல்வராணி, ரோகிணி, ராகிணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், தோமஸ் மற்றும் சண்முகத்தரசு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல-3, சோமசுந்தரம் அவெனியூ,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
