திருமதி. யுவராணி மகாதேவா

யுவராணி மகாதேவா

தோற்றம்: 22 ஏப்ரல் 1935 - மறைவு: 16 ஏப்ரல் 2026

யாழ். கலட்டி வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யுவராணி மகாதேவா அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - மதியாபரணம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - மாணிக்கரெட்ணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாதேவா (ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

இலண்டனை வசிப்பிடமாகக் கொண்டவர்களான தேவகி, பிரபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அபயலிங்கம் அவர்களின் அன்பு மாமியும்,

Dr.மாயவன், Dr.யாதவன், Dr.கேசவன், அஞ்சலா, Dr.சர்மிளா, ராஜ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

Dr.வைதேகி, Dr.வித்தியா, சாரங்கி, Dr.அஜன், மகாராஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காவியன், லக்சயன், இமையன், ஆதியன், அவயா, மெய்லன், அரன், அமன், அகானா, வியன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-04-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-04-2026 ஞாயிறு முற்பகல் 11.30 மணி முதல் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 510 2160
+44 795 636 2608

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2026 00:00)