5 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆ.அதிரூபசிங்கம்
தோற்றம்: 24 ஆகஸ்ட் 1938 - மறைவு: 06 ஜூலை 2017
திதி: 11/07/2022
தெரு தாண்டியும்,
ஊரறிந்த ஒரு மனிதன்,
பாரகன்று வானேறி,
வருடங்கள் ஐந்தாயிற்று.
அன்றாடம் அன்று காணும் அண்ணாவின் அந்த உருவம்,
ஆயிரம் கதைகளை
இன்றுமெங்கள் நினைவுகளில்,
இழுத்து வருது.
அன்று அவர் வாசல் தேடி,
பேசவரும் இளையவர் அனேகர்க்கு,
அவர்களின் அப்பாக்கள் வயதுதான் இவர்க்கு.
ஆனாலும்,
இவர் அகத்திலிருந்த எண்ணங்களின் இளமை,
அனைவர்க்கும் அண்ணனாக்கியது இவரை அன்று பலர்க்கு.
ஊரின்பால் அக்கறையில்
சமூகச் சீர்களுக்கு,
இவர் ஒப்புவித்த ஒவ்வொன்றிலும்,
தப்பாமல் நகைச்சுவை நளினம் செய்யும்.
இதனால் எப்போதும் இவரைச்சுற்றி இளையவர் கூட்டம் நிற்கும்.
ஊர் உயர்வில் உளம்கொண்ட உன் நினைவு,
எப்பொழுதும் எங்களுடன் கூடவரும்.
வல்வையின் நினைவுகளில் வாழ்வாய் என்றும்
அட்சரம் பிசகாமல் அழகு தமிழை உச்சரிக்க ஆசை கொண்டவனின்
ஓசை ஓடி ஆண்டுகள் ஐந்தாயிற்று.
www.tamilthakaval.org
