35ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் EK சண்முகநாதன்
(Advisor to Minstry of Finance Kaduna State, Nigeria, Senior Director of Education, Minsitry of Education, Srilanka, Principal-Jaffna Central College(1971-1980), Sri Lanka, Principal-Kopay Christian Co)
தோற்றம்: 14 டிசம்பர் 1924 - மறைவு: 04 டிசம்பர் 1985
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த EK சண்முகநாதன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் முப்பத்தைந்தான போதிலும்
நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்த
துயர் நீங்கவுமில்லை ஆறவுமில்லை அப்பா
உங்கள் குடும்பத் தெய்வம்
நீர்வேலிக் கந்தனை எவ்வளவு வேண்டியும்
விதியை தவிர்க்க முடியவில்லை
அப்பா உங்கள் அன்புபெருக
அணைத்த கரங்களும் பாசமான மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்று இல்லையென வருந்துகிறோம்.
முப்பத்தைந்கள் ஆண்டுகள்
உருண்டோடியும் உங்கள் அன்பான
ஆதரவான பாசமான நினைவுகள் ஓயா அலைகளாக
ஒவ்வொருநாளும் சில சந்தர்பங்களில் வரும்போது
நீங்கள் மீண்டும் எங்களிடம் வரமாட்டீர்களோ என ஏங்குகிறோம்
ஆண்டுகள் பல சென்றும்
அவரின் பழைய மாணவர்கள்
தங்களை நல்நெறிப்படுத்தி படிக்க வைத்து
நல்ல நிலைக்கு வரச்செய்திருக்கிறார்
என இன்றும் போற்றுகிறார்கள்
இவற்றைக் கேட்க்கும்போது பெருமையாகவும்
கவலையாகவும் இருக்கிறது
மறு பிறவி இருந்தால் எங்களிடமே
வருவீர்கள் என இறைவனை வேண்டுகிறோம்.
என்றும் உங்கள் பசுமையான
பாசாமான நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரி குடும்பம்.....
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
