Appreciation Remembrance

Late Elayathamby Thanaluxmy

Elayathamby Thanaluxmy

Date of Birth: 28 July 1927 - Deceased: 16 September 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்.புத்தூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, டென்மார்க் Herning, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தனலட்சுமி அம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.நாட்கள் முப்பத்தொன்று சென்றாலும்

அகலவில்லை எங்கள் துயரம்
மனம் உங்களை தேடுகிறது
நினைவுகள் ரணமாய் கொல்கிறது

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அம்மா உங்கள் அன்பை யாரிடம் காண்போம்
பெற்ற கடன் தீர்க்க நாங்கள் உங்களுக்கு காலம் தந்தோம்
ஆனால் நாங்கள் உங்களிடம் பட்ட கடனை தீர்க்க
நீங்கள் எங்களுக்கு காலம் தரவில்லையே அம்மா

உங்களை சுமை என்று நினைத்து விடுவோம்
என்று எண்ணி விட்டீரோ
எங்களை ஆயுளுக்கும் கடனாளிகள் ஆக்கி விட்டு
எங்கு சென்றீர் எம் அன்பு தெய்வமே

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 16-10-2021 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் நடைபெற்று அதனை தொடர்ந்து மதிய போசனம் நிகழ்வும் அவரது இல்லத்தில் நடைபெறும்.
 
இங்ஙனம்:-
 
இளையதம்பியின் பிள்ளைகளும் குடும்பத்தினரும்

www.tamilthakaval.org