1st Year Remembrance
Mr Ganesg Nagamany
Date of Birth: 02 May 1933 - Deceased: 27 October 2018
அன்பின் தீபமாய், பண்பி்ன் உறைவிடமாய் பாசத்தின் மகுடமாய்
பரிவுடன்எம்மை காத்த எங்கள் அன்புத் தெய்வமே
எறும்பொன்று புகுதல் போல எந்திரம் செலுத்தி
ஒற்றை நரம்பொன்றும் பழுதுறாமல் எம்மை நலம்முறச் செய்த
உம்மை காலனவன் கவர்ந்திட்ட கற்பகமே
எம் கண்கவரும் அற்புதத்தின் வித்தகனே
ஞாலமதில் பிறந்திட்ட உன் புகழை நாம் பாடிடுவோம்
நாகமணி பெற்றெடுத்த நற்பேறே
இவ் நானிலமே பயன் உறவே நடந்தாயே
கடல்கடந்தும் உன் ஈர்ப்பு இழுக்குதையா
அது கருணை என்னும் வடிவில் எமை இழுக்குதையா
இறந்தாலும் இறவாது உன் நினைவு
மறந்தாலும் முடியாது உன் உறவு
ஓராண்டே கழிந்தாலும் ஒழிந்தாலும்
உன் அன்பெனும் தீ அகன்றிடுமோ எம் நெஞ்சில்
எம் மண்ணைப் பிரிந்தே தான் சென்றாலும்
நம் மனங்களின் நாயகனாய் ஆனவரே
வின்னில் இருந்தேதான் ஆள்கின்ற
எம் விடியலுக்காய் நல் வித்திட்ட வித்தகரே
நேற்றோடு இன்றும் நாள் நகரும்
உன் நினைவுகளோ எம்முடனே சங்கமிக்கும்
எம் வாழ்நாட்கள் விண்நாட்கள் ஆவது போல
உன் பிரிவாலே பிணமாக வாடுகின்றோம்
எம் கண்களுமே கண்ணீராய் கதை வடிக்கும்
உன் கைபிடித்து கதறிஅழ அவை துடிக்கும்
இருந்தாலும் இறந்தாலும் மறவோமே
உனை அனுதினமும் ஆண்டவனாய் நினைப்போமே
மாயப்புயல் வடிவில் மண்ணுலகில் எமைவிட்டு சென்றாயே
கிருபைகள் நாம் பெற்றிடவே 'கிருபாவை'தந்தாயே!
சிவாகம விதிப்படி 'சிவா'வினையும் ஈன்றாயே
பவனிவரும் உன் நிழல்போல் 'பவானி'யையும் படைத்தாயே
பாசமுடன் இருக்கின்றோம் படைத்தவனே உனக்காக நேசமுடன்
நீ மீண்டும் வருவாயா எமக்காக..
அன்புக் கரம் நீட்டி அனைவரையும் அரவணைத்து
தெம்புடைய வார்த்தை பேசி சிறுவரையும் வெற்றிகொண்டீர்
மண்புகழ் காத்திடவே மகிழ்வுடனே சேவைசெய்தீர்
மனிதகுல மகரஜோதி ஆகி எமை மகிழ்வித்தீர்..
மழலைகள் ஒளிவிளக்கே உம் மனைவி எங்கள் 'குலவிளக்கே'
நாகேஸ்வரி எனவே நாமம் கொண்டாளே
வைகாசி வந்துதித்த வீறுகொண்ட விடிவிளக்கே
ஐப்பசியில் அணைந்தாலும் ஆண்டவனோடிணைந்தாயே
சொந்தம் பல உண்டு -ஆனால் சொல்லொனாத் துயர்துடைப்போர் யாரோ?
தொடர்புகளுக்கு:-
மனைவி:-416-724-4118
சிவா(மகன்):-416-846-4118
கிருபா(மகன்):-416-508-4940
பவானி(மகள்):-647-854-6720
திரு கணேஸ் நாகமணி
ஓராண்டு நினைவேந்தல்
அன்னை மடியில்-02-05-1933 ஆண்டவன் அடியில்-27-10-2018
திதி;14-11-2019
www.tamilthakaval.org
