one year Remembrance

Late Haran Kanagalingam Periyathamby

Haran Kanagalingam Periyathamby

Date of Birth: 02 July 1949 - Deceased: 12 April 2021

யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா OHIA COPLEY நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஹரன் கனகலிங்கம் 

பெரியதம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
 இப் பூமியில் உங்களை நாம் இழந்த
துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்!
 
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
 பண்பின் உறைவிடமாய்
 வாழ்வின் வழிகாட்டியாய்
 வாழ்ந்த எம் குள விளக்கே!
 
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
 ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
 
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org