6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு

ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு

தோற்றம்: 05 பெப்ரவரி 1975 - மறைவு: 09 ஜனவரி 2015

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் திருநாவுக்கரசு அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே எங்கள் ஆருயிர் அப்பாவே

அன்போடும் பண்போடும் அயாரமல் காத்தவரே
ஆறு ஆண்டு ஆனதுவோ அப்பா நீங்கள் இன்றி
ஆறாத் துயரில் நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.
 
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் அப்பா
உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
எல்லாம் இந்தென்ன எம்மோடு நீயின்றி
இதயம் கனக்கிறது எழுதிய விதி எண்ணி
நேற்றுபோல் எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உனைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா
 
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும் கண்முன்னே
நீ வாழ்ந்த நினைவுகள் ஒருபோதும் அகாலது
வலிகள் சுமந்து விழிகள் நனைந்து
வாழும் நாள் முழுக்க உன்னை
நினைந்து வாழும் உன் குடும்பத்தினர்.ஓம் சாந்தி..! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி...!
 
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org