1ST Remembrance
Late KANAPATYPILAI INTHIRRAJA
(Retired VICEW PRINCIPAL)
Date of Birth: 01 January 1940 - Deceased: 27 September 2021
முதலாவது ஆண்டு நினைவஞ்சலி!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு பெயரோடும் புகழோடும் வாழ்ந்து உற்றார் உறவினர் நண்பர்களையும் ஊரவர்களையும் பறாளாய் விநாயகர் மற்றும் இளையோன் முருகனையும் அயலாள் கம்பனை அம்பாளையும் விக்ரோறியாத் தாயையும் கடந்த 27/09/2021 அன்று கண்ணீரில் தவிக்கவிட்டு மீளாத்துயில்கொண்ட புகழ் பூத்த கல்விமான் விக்ரோறியாக்கல்லூரியின் இளைப்பாறிய ஆசிரியர் உப அதிபர் திருவாளர் கணபதிப்பிள்ளை இந்திரராசா(இந்திரன் மாஸ்டர்) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இந்நாளிலே எங்களுக்கெல்லாம் நல்லறிவையும் நற்போதனைகளையும் ஊட்டி நல்வழி காட்டிச்சென்ற அன்பின் ஆசிரியரின் ஆத்மா பறாளாய் விநாயகர் முருகன் மற்றும் கம்பனை அம்பாளின் கழலடியில் சாந்திபெறப்பிரார்திப்போம்.
அதற்குள் வருஷம் ஒன்று
கடந்துவிட்டதா வானம்
புதைந்து போய்விட்டதா
நதி கரைந்து ஆழியோடு
சேர்ந்துவிட்டதா
அத்தனையும் தீர்ந்துவிட்டதா
ஆலமெனச் சூழ்ந்துவிட்டதா
ஆண்டு ஓன்று நேற்றுப்போல்
உள்ளதே
நெஞ்சம் இன்னும் கொல்லுதே
இமைப்பொழுதும் நீங்காத
இந்திரன் நாமமே
கல்வித்தாயைத்
தன்னகத்தே கொண்டு
எமையெல்லாம் ஆண்ட ஆசானே
ஈசனின் ஆக்கத்தில்
ஞாலமும் வந்தது
ஆசானின் ஆக்கத்தில்
ஞானமது பெற்றது
கல்வி ஒளியால்
காசினியை நிறைத்தவர்
அன்பின் வழியை
அகிலத்துக்கு உரைத்தவர்
அன்னம் ஊட்டும்
தாய்க்கும் மேல் இவர்
அறிவை ஊட்டிய
இரண்டாம் தாய் இவர்
அகரம் முதலில்
சொல்லிக் கொடுத்தவர்
சிகரம் தொட்டிட
வழியும் வகுத்தவர்
ஏணியாய் ஆகி
மாயப்பிறப்பறுத்த
மாயவர்
தூயவழி காட்டிய
சிற்றம்பல நாதன்
தாய் போலக் காத்திட்ட
திருமகன்
தாள் வணங்கிப் போற்றிடுவோம்
பெருமகன் இந்திரன் ஆசானை
மெய் இவர் பொன்னடிகள் கண்டு
பொய்யாகின அனைத்தும்
மெய்ஞ்ஞானம் கொண்ட
மெய்ச்சுடரே எங்கள் இந்திரரே
அஞ்ஞானம் தன்னை
அகற்றிட்ட பேரொளியே
மாசற்ற சோதியே
தூய மணிச்சுடரே
அறம் கொண்டு
திறத்தால் மாயை அகற்றியவரே
கல்வித்தாயைச் சரிபாதியாக்கி
வாழ்வின் அர்த்தங்கள் காட்டிட்ட
அற்புதமனிதர்
முந்தை வினைதனை
சிந்தையில் உணர வைத்த
சிந்தனையாளர்
இந்திரன் எனும் பெயரில்
சந்திரன் போன்ற சிரித்த முகமும்
நிமிர்ந்த நடையும் திடகாத்திரமான
உடல்மைப்பும்கொண்டவர் எங்கள் ஆசான்.
பயமறியாத மனம் பொய் பேசாத குணம்
நேருக்குநேர்ப்பேசும் உண்மை முகம்
உறவாயிருந்தாலும் நட்பாயிருந்தாலும்
நியாயம் ஒன்றையே நிலையாய்ப்பேசும்
நெஞ்சுரம்கொண்டவர்
கல்லூரியிலும் கல்லூரிக்கு வெளியிலும்
நல்ல அறிவுரைகளையும் புத்திமதிகளையும் கூறி
ஊக்கப்படுத்தியவர்.
மாணவர்கள் மீதும் ஊர் மக்கள் மீதும்
அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டவர்
விநாயகர் முருகன் அம்பாள் மீது அளவிலாப்
பக்தி கொண்ட பக்திமான்.
எந்நேரமும் முருகனின் சுலோகங்களை
முணுமுணுத்தபடியே வலம்வந்த வலங்கைமான்.
இப்படியெல்லாமுமாக வாழ்ந்து எம்மை எல்லாம்
ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு ஆசானின் ஆத்மா
சாந்தியடையபிரார்த்திப்போம்!!
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி.
விக்டோரியா கல்லுரி பழைய மாண்வர்கள்
www.tamilthakaval.org
