9ம் ஆண்டு நினைவஞ்சலி

திரு (ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம்)

(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம்)

தோற்றம்: 06 பெப்ரவரி 1932 - மறைவு: 06 ஏப்ரல் 2011

                                   மண்ணில்: 06- பெப்ரவரி 1932 — விண்ணில்: 06 ஏப்ரல் 2011

திதி:- 27 பங்குனி 2020 வெள்ளிக்கிழமை 
 
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த.அமரர் திரு (ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம் ) அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி
நிமிடங்களாய் நாட்களாய் மாதங்களாய்-
27-03-2020- இன்று

ஒன்பது ஆண்டுகளாய்
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்

அனைவராலும் ஐயா ஐயா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்

ஒன்பது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக
தர்மத்தின் தலைவனாக
பொன்னம்மாவின் செல்வனாக
காலத்தை வென்ற தலைமகனாக
ஆறுமுகம் -கந்தையா
பொன்னம்மாவின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா

என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள்
…அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்
இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்பு , மனைவி, பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
 
 
தகவல்:-குடும்பத்தினர்.


www.tamilthakaval.org