one year Remembrance

Late Kandiah Thirunavukkarasu

(Retired Principal)

Kandiah Thirunavukkarasu

Date of Birth: 05 September 1950 - Deceased: 20 June 2021

 யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர் அமரர் கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றதையா

 ஆறவில்லை எம் துயரம்
 ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
 நீங்கள் இல்லையே !
 
ஒளி தரும் சூரியனாக இருள்
 அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
 நல்லவனாக பார் போற்றும்
 வல்லவனாக வாழ்வாங்கு
வாழ்ந்து- எங்களை வாழ
வைத்த தெய்வமே உங்கள்
 ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள்
 யாவும் எங்கள் வாழ்வில்
 என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
 
பாசத்தின் பிறப்பிடமாய்
 பாரினிலே நேசத்துடன் எங்களை
 ஆளாக்கி நேர்மையுடன்
வாழ்ந்தீர்களே அப்பா !
 எங்களுடைய வெற்றிகளுக்குப்
 பின்னால் நீங்கள் இருந்தீர்கள்
 தோல்விகளுக்குப் பின்னால்
 தோள் கொடுத்தீர்கள்
 மறக்க முடியவில்லை அப்பா !
 
வருடங்கள் எத்தனை
சென்றாலும் எம் நெஞ்சை
 விட்டு அகலாது உங்கள்
நினைவுகள் அப்பா !
 
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
 நீங்கள் எமதருகில் இல்லையே
 கண்மணி போல் எம்மைக்
காத்த அன்புத் தெய்வமே!
 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! 
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org