1st year Remembrance

late Lalithambigai Thambiaiyah

Lalithambigai Thambiaiyah

Date of Birth: 18 March 1959 - Deceased: 16 April 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Northern California வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லலிதாம்பிகை தம்பிஐயா அவர்களின் 1ம் ஆண்டு

நினைவஞ்சலி.

லலிதா! எந்தன் இன்னுயிர்த் துணைவியே!!
மலை போல் துயர்வரினும்
மயங்கா உறுதி தந்தவளே!
சிலை போல் நான் இப்போ
சித்தமின்றித் தவிக்கின்றேன்!
அலை போல் உன் நினைவு
அசைந்தசைந்து வருவதென்ன?
 
வாழ்வு தந்தாய் எனக்கு, வளமும் தந்து நின்றாய்!
தாழ்வு என்பதன் தாற்பரியம்
உணராதிருக்கச் செய்தாய்!
பாழ் நெஞ்சம் இப்போ
படும் துயரம் யார் அறிவார்?
 
மண வாழ்வின் பெருமையினால்
மணிகள் இருவர் வந்தனர் நமக்கு!
குணமாக வாழ்ந்திருந்தோம்
குடும்பத்தில் சுகமாக!
கணநாதன் கருணையினால்
களிப்புடனே வாழ்ந்த வாழ்வு
எமதூதன் வருகையினால்
உடைந்ததுவே உருவமற்று!
 
ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம் உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம் உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம் உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனை சென்றாலும்
மாறுமோ இன் நிலமை..?..!!
 
பேச்சினிலே நீங்கள்!- சுவாசிக்கும்
மூச்சினிலும் நீங்கள்!
எதிலுமே நீங்கள்! எல்லாமே நீங்கள்!!!!!
எம் தெய்வமே! உங்கள் ஆத்மா சாந்தி பெற
ஆண்டவனை வேண்டுகின்றோம்!
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org