1st Year Remembrance
Mrs Rasarathinam Ledchumy (Parimalam)
Date of Birth: 11 January 1944 - Deceased: 24 April 2019
மாலர்வு-11,01,1944- .உதிர்வு-24.04.2019
திதி -12..05.2020 செவாய் கிழமை அன்று
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கொண்ட
அமரர் இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்) அவர்களின் 1ம் ஆண்டு
நினைவஞ்சலி
அன்னார் காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான
மாரிமுத்து தம்பதிகளின் புத்திரியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை,பாலா ,சிங்கம்
சின்னத்துரை, பேத்தச்சி - மற்றும் பார்க்கியம் ஆகியோரின்
அன்புச்சகோதரியும்
வசந்தகுமார் மலர்வதான சுகந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும் ,
சரிதா கீர்த்தன் கீர்த்தி லவன்சி ஆகியோரின் அன்புப் பேத்தியம் ஆவார்
அன்னாரின் 1ம்ஆண்டு நினைவஞ்சலி 12-05-2020 அன்று
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
காலச்சுழற்சியில் ஓர்ஆண்டு கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர்
மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம்
இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம்
எங்கள் அம்மா
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின்
ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர்.
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும்
உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் , பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள்
புட்டப் பிள்ளை
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
