31ம் நாள் நினைவஞ்சலி

31 ஆம் நாள் நினைவஞ்ச அமரர் தர்மலிங்கம் நிர்மலாதேவி (மாலா)

(ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை, முன்னாள் உப அதிபர்-)

அமரர் தர்மலிங்கம் நிர்மலாதேவி (மாலா)

தோற்றம்: 19 ஆகஸ்ட் 2019 - மறைவு: 24 செப்டம்பர் 2019

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் நிர்மலாதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

 அம்மா என்றழைக்க நீ இருந்தாய்
பாசமுள்ளவர்களாம் எம்மை வளர்த்தெடுத்தாய்
அன்பால் எம்மை அரவணைத்து
பண்பாய் எம்மை வளம்படுத்தி
நல்லொழுக்கத்தால் எமை அழகுபடுத்தி
உலகத்திற்கு இனம் காட்டிய
எம் அன்பு அம்மாவே!
வாழ்க்கையை வாழக் கற்றுத்தந்து
பல வசந்தங்களை காட்டிய
எம் அன்புத் தெய்வமே!  -நீர்
விண்ணுலகம் சென்ற காரணம்
தான் என்னவோ!
அம்மா உன் பிரிவை
எம்மால் ஜீரணிக்கமுடியவில்லை
ஏங்கித் தவிக்கிறோம்
தங்கள் திருமுகத்தை காணாத
பாவிகளாய்த் தவிக்கின்றோம் அம்மா!
உமது ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது அம்மாவின் மரணச் செய்தியறிந்து எமக்கு ஆறுதல் கூறி எமது துயரில் பங்கு கொண்டு உதவிகள் பல புரிந்தவர்களுக்கும், குறிப்பாக இன்று வரை எமது அப்பாவிற்கு ஆதரவாக இருக்கும் தாய்மாமா, கிருபா ரூபி தம்பதிகளுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஐயாவுக்கும் எமது துயரில் பங்கெடுத்த நல்ல உள்ளத்திற்கும், தொலைபேசி மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
தகவல்: கணவர், பிள்ளைகள்
 
Address: லோட்டன் லேன், மானிப்பாய்.
 
தொடர்புகளுக்கு:
 
தர்மலிங்கம் - கணவர் Mobile : +91 999 461 8147  Mobile : +91 822 007 0335 
லவன் - மகன் Mobile : +33 63 522 7015 
புருஷோத்தமன் - மருமகன் Mobile : +33 61 116 4601 
பாலினி - மகள் Mobile : +33 69 580 7949 
ஜயந்தன் - மகன் Mobile : +33 75 104 5558  

www.tamilthakaval.org