Mr. Manickam Raveendran (Ravi)
(நாதஸ்வர வித்துவான்)
Date of Birth: 09 May 1961 - Deceased: 08 November 2024
31ம் நாள் நினைவேந்தல் மற்றும் நன்றி நவிலல்
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும், தற்போது Paris-பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் ரவீந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவேந்தல் மற்றும் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி ஊடாகவும், முகநூல், மின்னஞ்சல் மற்றும் இணையதளம் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையங்கள், மலர் மாலைகள் சாத்தயவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
31 ஆம் நாள் நினைவேந்தல் நாதஸ்வர வித்துவான் ரவீந்திரன் மாணிக்கம் அவர்களின் 31 ஆம் நாள் நினைவேந்தலும் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் லாகூர் நேவ் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் (90 Rue Èmile Zola, 93120 La Courneuve) இல் நடைபெற உள்ளது.
அன்னாரின் ஆத்மாவின் சாந்திக்காக உங்கள் பிரார்த்தனைகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசண உபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
***-----------***
இங்ஙனம்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
