2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாணிக்கம் சிவபாலன் (சிப்பாய்)

மாணிக்கம் சிவபாலன் (சிப்பாய்)

தோற்றம்: 27 டிசம்பர் 1960 - மறைவு: 04 பெப்ரவரி 2019

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் சிவபாலன் அவர்களின் 2ம் ஆண்டு

நினைவஞ்சலி.

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்

இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
 
எத்தனை உறவுகள் இருந்தாலும் தோள்சாய அப்பா
இல்லையே என கதறி அழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்கவிட்டு வழி தெரியா தூரம்
விரைந்தோடி சென்றதேனோ ?
 
பறி கொடுத்து விட்டாலும்
உங்கள் பாசத்தைப் பறித்துவிட
எத்தனை ஜென்மம் வேண்டும்
 
அவனுக்கு!உம் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உமக்கு மனம் வரவில்லையோ?
 
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
சென்றது ஏன்? கலங்குகின்றோம்
எண்ணவில்லை நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்து விட்டீர்
 
இன்று உங்கள் பிரிவின் நினைவால் வாழ்கின்றோம்
அதனால் உணர்வின் வலியை எங்கள் கண்ணீரில்
அஞ்சலியாக காணிக்கை ஆக்குகின்றோம்.   

 
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org