3rd year Remembrance
Late Sinnathurai Manonmany
Date of Birth: 01 January 1920 - Deceased: 04 July 2017
திதி: 30.06.2020
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும்
சின்னத்துரை மனோன்மணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்களின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
