31ஆம் நாள் நினைவேந்தல் நினைவஞ்சலி

அமரர் திருமதி. பரமேஸ்வரி குமாரசுவாமி

திருமதி. பரமேஸ்வரி குமாரசுவாமி

தோற்றம்: 17 செப்டம்பர் 1947 - மறைவு: 07 ஆகஸ்ட் 2022

கோப்பாய் தெற்கை பிறப்பிடமாகவும் மயிலணி-சுன்னாகத்தையும் மற்றும் கொழும்பையும்  வாழ்விடங்களாக கொண்ட திருமதி பரமேஸ்வரி குமாரசுவாமி அவர்கள் 07/08/2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான ஆயுர்வேத மருத்துவ கலாநிதி அ. வி. இராசரத்தினம்+தையல்நாயகி தம்பதிகளின் அருமை மகளும்,

காலம் சென்றவர்களான  கு. முத்துகுமாரசுவாமிப்பிள்ளை+கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலம் சென்ற மு. குமாரசுவாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

யமுனா மற்றும் ஜானகி  ஆகியோரின் அருமைத்  தாயாரும்,

திருலிங்கம் மற்றும் பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜன், குகன், ஹரினி மற்றும் ஹஷினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

காலம் சென்ற வைத்தியநாதன் அவர்களின் பாசமிகு தங்கையும்,

சண்முகநாதன், மகேஸ்வரி, பத்மநாதன், மற்றும் ஜெகநாதன் ஆகியோரின் அன்புத் தமக்கையாரும்,

திலகவதி, ஸ்ரீபதி, அருணா மற்றும்  காலம் சென்றவர்களான பவானி, மங்கையற்கரசி, சிவசோதி, சந்திரசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் 31ஆம் நாள் நினைவேந்தலை முன்னிட்டு அவரது உயிரானது என்றும் இறைவனடி நிழலில் அமைதியுற்று நிலவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குவாம்.

மேலும் எமது தாயார்  இறைவனடி எய்தியதையடுத்து, எமது துயரில் கலந்து கொண்டோருக்கும், ஆறுதல் மொழிபல கூறித் தேற்றியோருக்கும், இரங்கல் செய்திகளையும், மலர்வளையங்களையும் பலவாறு அனுப்பியோருக்கும், வேள்விச் சிறப்புக்களை நன்றாற்றிய சைவக் குரவர் பெருமக்களுக்கும், இத்துன்பியல் தருணத்தில் எமக்கு பலவாறு உதவியோருக்கும், எமது அன்னை நோயுற்று இருந்த வேளையில்  அவருக்கு உறுதுணையாய் விளங்கியவர்களுக்கும், எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 
இங்ஙனம்:- அன்னாரின் குடும்பத்தினர்.

 

www.tamilthakaval.org