1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முத்துக்குமாரு ஜெயக்குமார் (JP)
(ஓய்வுபெற்ற அதிபர் யாழ். விக்கினேஸ்வரா வித்தியாலயம், தொல்புரம்)
மறைவு: 07 ஆகஸ்ட் 2019
கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு செட்டியார் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டவரும், யாழ். தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய ஓய்வுபெற்ற அதிபருமாகிய அமரர் முத்துக்குமாரு ஜெயக்குமார் (JP) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
உழைப்பால் உயர்ந்தவரே
ஊரார்களின் உள்ளத்தில்
இன்றும் இருப்பவரே..
தனது சகோதர சகோதரி அவர்களின் பிள்ளைகளையும்,
தனது மனைவியின் சகோதர சகோதரி அவர்களின் பிள்ளைகளின்
எதிர்காலத்தை நல்வழியில் சிறப்பாக்கிய தந்தையே..
கறுத்த உருவம்
கள்ளம் கபடமற்ற சிரிப்பு
வெள்ளை உள்ளம்
வசீகரிக்கும் பேச்சு!!!
எல்லோரையும்வரவேற்கும் மாண்பு
அனைவருடனும் அன்புறவாடும் திறமை
ஊரார்களின் அன்புக்குரிய 'மாதா' ஐயா..
எங்கள் வழிகாட்டியான குருவே!!!
உங்களை இழந்து ஓராண்டு சென்றாலும்
ஆற்றமுடியாத துயரத்துடன்
உங்கள் நினைவுகளுடன்
தொடர்ந்து பயணிக்கின்றோம்!!!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.........
தகவல் :- மனைவி, சகோதர சகோதரிகள், மைத்துனர்கள்,மைத்துனிகள்.
www.tamilthakaval.org
"We pray for his sole to Rest In Peace."
- Weeralukshmy Mahadeva (08/09/2020 12:21)
