1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் தெய்வேந்திரம்
(படவரைஞர்- Draughtsman, முன்னாள் உத்தியோகத்தர்- நீர்ப்பாசன திணைக்களம், கட்டடங்கள் திணைக்களம்- இலங்கை, செளதி)
தோற்றம்: 30 ஜனவரி 1946 - மறைவு: 09 ஜூலை 2021
யாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி வடக்கு வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27.06.2022
ஆண்டு ஒன்று கடந்ததப்பா
ஆலமரம் ஒன்று வீழ்ந்ததப்பா...!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம் கனவெல்லாம்
நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை!
ஆறுதலை இனி யார் தருவார்
கடவுள் தந்த வரமே எங்கள் தந்தை நீ!
என்றும் உங்கள் நினைவுகள் சுமந்து
உங்கள் வழியில் உங்கள் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
