31ஆம் நாள் நினைவஞ்சலி
31ஆம் நாள் அந்தியேட் நகுலேஸ்வரன் யோகரஞ்சினி (சுமதி)
தோற்றம்: 26 ஜனவரி 1967 - மறைவு: 19 செப்டம்பர் 2019
கடந்த 19.09.2019 வியாழக்கிழமை சிவபதம் அடைந்த எமது குடும்பக் குலவிளக்கு அமரர் நகுலேஸ்வரன் யோகரஞ்சினி (சுமதி) அவர்களின் அந்தியேட்டி சபிண்டிகரணம் 19.10.2019 சனிக்கிழமை 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதால் தாங்கள் குடும்ப சகிதம் கலந்து கொண்டு ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம் பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு:- எமது குடும்பத்தலைவியின் இறுதி நிகழ்வின்போது மனவுளைச்சலுக்கு அடிமையாக இருந்த நாம் எமது ஞாபகத்திற்கு அப்பால் யாருக்காவது அழைப்பு வழங்க தவறியிருப்பின் இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாய் பெருமனதுடன் ஏற்று கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது குடும்பத் தலைவியின் மரணச் செய்தி அறிந்து நேரில் ஓடோடி வந்து கலந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர், நண்பர்கள் மற்றும் வர்த்தக பெருமக்கள், பாடசாலை சமூகத்தினர் மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் கண்ணீர் அஞ்சலி பிரசுரம், பணர் வெளியிட்டவர்களுக்கும் மற்றும் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறியவர்களுக்கும் இக்கிரியைகள் சிறப்புற நடத்திய அத்தனை பெருமக்களுக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
யா/நெல்லியடி மத்திய மகா
வித்தியாலய வீதி,
காளி கோவிலடி, நெல்லியடி, கரவெட்டி,
இங்கனம் :
குடும்பத்தினர்
+94 77 308 3847
www.tamilthakaval.org
